ETV Bharat / city

குடிநீர் விநியோகம் இல்லை: மக்கள் தர்ணா - Trichy latest

திருச்சி: மணப்பாறை நகராட்சியில் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் கேட்டு சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு, திருச்சி மாவட்டச்செய்திகள், திருச்சி, திருச்சி, மணப்பாறை நகராட்சியில் குடிநீர் விநியோகம் வழங்காததால் மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா, People sat on the road as drinking water supply was not provided in Manapparai, Manapparai, Trichy latest, People sat on the road as drinking water supply was not provided in Manapparai
people-sat-on-the-road-as-drinking-water-supply-was-not-provided-in-manapparai
author img

By

Published : Mar 17, 2021, 12:31 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் உயர் நீர்தேக்க தொட்டி மூலம் பாரதியார் நகர், எம்ஜிஆர் நகர், சாய் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த உயர் நீர்தேக்கத் தொட்டிக்கு கடந்த சில நாள்களாக முறையாக காவிரி நீர் ஏற்றாத நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று (மார்ச் 17) காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினரும், நகராட்சி அலுவலர்களும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தத் திடீர் மறியல் போராட்டத்தால் மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று: மூடப்பட்ட அரசு பொறியியல் கல்லூரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.