ETV Bharat / city

வடமாநிலத்தவர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு - இருவர் கைது - வடமாநில இளைஞர்கள் கைது

திருச்சி காகித ஆலையில் பணிசெய்த ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில் வடமாநிலத்தவர் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இருவர் கைது
இருவர் கைது
author img

By

Published : Aug 30, 2021, 7:12 PM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த மொண்டிபட்டியில் இயங்கும் தமிழ்நாடு காகித ஆலை அலகு-2ல் திருச்சி இபி ரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் கிருஷ்ணமூர்த்தி ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தார்.

கடந்த 22ஆம் தேதி மாலை காகித ஆலை வளாகத்திற்குள் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கும் பிகாரைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 23ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

இந்நிலையில், மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டதால் பரிசோதனைக்காக கடந்த 26ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தலையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிசிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை காவல் துறையினர் பிகார் மாநிலத்தை சேர்ந்த விஜய் ராம் அவரது சகோதரர் ராம்தேவ் ராம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.