ETV Bharat / city

மணிரத்தினம் உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு: ஜவாஹிருல்லா கண்டனம்

author img

By

Published : Oct 6, 2019, 8:16 AM IST

திருச்சி: இயக்குநர் மணிரத்தினம் உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

Trichy Press Meet MMK President

மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். முன்னதாக திருச்சி பாலக்கரையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிராக நடக்கும் படுகொலையைக் கண்டிக்கும் வகையில் பிரதமருக்குக் கடிதம் எழுதிய தமிழ்த் திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் உட்பட 49 பேர் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை போன்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்து கொள்ளப்படும். நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பிரசாரம் செய்துவருகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த ஜவாஹிருல்லா

மத்திய அரசின் நீட் தேர்வு முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பது போன்ற காரணங்களுக்காக வரும் இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணி இடைத்தேர்தலில் தேர்தலில் அமோக வெற்றிபெறும். இந்த தேர்தல் முடிவு தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழியை உருவாக்கும் எனத் தெவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'பிரதமர் மோடி, சீன பிரதமர் ஆகியோரின் வருகைக்காக வரவேற்பு பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. ராதாபுரம் தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உரியக் காலகட்டத்தில் நல்ல முடிவு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். தற்போது அதிக வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறையை மாற்றி வாக்கு விழுக்காடு அடிப்படையில் வெற்றியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் கருத்தாகும்.

மத நீதி போதனைகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றால் அனைத்து மதத்தினரின் போதனைகளையும் சேர்ப்பதுதான் சரியானது. ஆனால் பகவத்கீதையை மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் சேர்த்திருப்பது சரியான முடிவு இல்லை' என்றார்.

இதையும் படிங்க:குடிமராமத்து பணிகளில் முறைகேடு: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!

Intro:மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Body:திருச்சி: மணிரத்தினம் உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். முன்னதாக திருச்சி பாலக்கரையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
சிறுபான்மையினர் தலித்துகளுக்கு எதிராக கும்பல் படுகொலையை கண்டிக்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குனர் மணிரத்தினம் உட்பட 49 பேர் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எந்த எந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்து கொள்ளப்படும். நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய அரசின் நீட் தேர்வு முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பது போன்றவற்றின் காரணமாக அதிமுக அரசுக்கு வரும் இடைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணி இடைத்தேர்தலில் தேர்தலில் அமுக வெற்றி பெறும். இந்த தேர்தல் முடிவு தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழியை உருவாக்கும்.
சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம். பிரதமர் மோடி, சீன பிரதமர் ஆகியோரின் வருகைக்காக வரவேற்பு பேனர்கள் வைக்கலாம் என்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது.
ராதாபுரம் தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உரிய காலகட்டத்தில் நல்ல முடிவு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். தற்போது அதிக வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறையை மாற்றி வாக்கு விகிதாசார அடிப்படையில் வெற்றியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் கருத்தாகும்.
மத நீதி போதனைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றால் அனைத்து மதத்தினரின் போதனைகளையும் சேர்ப்பதுதான் சரியானது. ஆனால் பகவத்கீதையை மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் சேர்த்திருப்பது சரியான முடிவாக இல்லை என்றார்.

Conclusion:பகவத் கீதையை மட்டும் மத நீதி போதனையாக அண்ணா பல்கலைகழகம் சேர்த்திருப்பது சரியான முடிவு இல்லை என்று ஜவாஹிருல்லா கூறினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.