ETV Bharat / city

மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து முன்னிலை - மகேஷ் பொய்யாமொழி முன்னிலை

திருச்சி: திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 11 ஆயிரத்து 364 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றார்.

திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி
திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி
author img

By

Published : May 2, 2021, 2:22 PM IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி, மணப்பாறை ஆகிய ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என். நேரு, திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன், முசிறி தொகுதியில் திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன், துறையூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார், மணப்பாறை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமத் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 6ஆவது சுற்று முடிவில் திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 11 ஆயிரத்து 364 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றார். இந்தத் தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிடும் பா. குமார் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.