திமுக:
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக தெற்கு:
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மரியாதை!
காங்கிரஸ்:
காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் அக்கட்சியினர் மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், ராஜா நசீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அந்த பகுதியில் கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தமாகா:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் நந்தா செந்தில் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் சமத்துவ மக்கள் கட்சி, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.