ETV Bharat / city

லால்குடி மகா மாரியம்மன் கோயிலில் ஜல்லிக்கட்டு - பூச்சொரிதல் விழா

திருச்சி லால்குடி மகா மாரியம்மன் கோயிலில் 58ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுச் சென்றனர்.

லால்குடி மகா மாரியம்மன் கோயிலில் ஜல்லிக்கட்டு

author img

By

Published : Feb 1, 2022, 5:00 AM IST

திருச்சி: லால்குடி கீழவீதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலின் 58ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று (ஜன. 31) நடைபெற்றது.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களும் பங்கேற்றனர். சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பட்டுப் புடைவை, வேஷ்டி, துண்டு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

லால்குடி மகா மாரியம்மன் கோயிலில் ஜல்லிக்கட்டு

இந்நிகழ்வில், லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளைப் பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் காத்தான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: தை அமாவாசை: ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.