ETV Bharat / city

மலைப்பகுதியில் பேருந்து சேவை - பயணம் செய்த எம்எல்ஏ

author img

By

Published : Apr 5, 2022, 10:55 AM IST

திருவள்ளூர் அருகே முதல்முறையாக மலைகிராமங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவை எஸ் சந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு ஒன்றிய மலைப்பகுதிகளில் உள்ள காக்களூர், ராமாபுரம், வெங்கட் ராஜ் குப்பம் ஆகிய பகுதிகளிலிருந்து திருத்தணி வரை சென்றுவர பேருந்து சேவை இல்லை. இதனால் கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று முதல் முறையாக டவுன் பஸ் சேவை தொடக்க விழா காக்களூரில் நடைபெற்றது. இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் பங்கேற்று பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் 10 கிலோ மீட்டர் தூரம் வரை அந்தப் பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது வழியெங்கும் உள்ள கிராமங்கள் மலர்தூவி தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக புதிய பேருந்தை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா மற்றும் சில அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆசிரியரின் தனி முயற்சி: பள்ளியாக மாற்றப்பட்ட கிராமம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.