ETV Bharat / city

முடங்கிய இணைய சேவை - கொள்முதல் நிலையத்திலேயே கொட்டப்பட்ட நெல் - கொள்முதல் நிலையத்திலேயே கொட்டப்பட்ட நெல்

நெல் கொள்முதல் நிலையம் திறந்து ஒரு வார காலமாகியும் இணைய சேவை பாதிப்பால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

கொள்முதல் நிலையத்திலேயே கொட்டப்பட்ட நெல்

author img

By

Published : Jan 27, 2022, 8:27 PM IST

திருச்சி: மணப்பாறை தொகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் நிலையத்தினை, சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பிராம்பட்டி, தெற்கு சேர்ப்பட்டியில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல் சமது கடந்த 20ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்து வைத்திருந்த நெல்லை அந்த கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். நெல் கொள்முதல் நிலையம் திறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இணைய சேவை பாதிப்பு எனக்கூறி கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் அந்த வளாகத்திலேயே நெல்லை கொட்டி குவித்து வைத்துள்ளனர்.

கொள்முதல் நிலையத்திலேயே கொட்டப்பட்ட நெல்

பின்னர் இந்த நெல் கொள்முதல் நிலையத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நெல் கொள்முதல் நிலையம் திறந்து ஒரு வார காலமாகியும் இணைய சேவை பாதிப்பால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை எலி மற்றும் பெருச்சாளிகள் சேதப்படுத்தி வருகிறது. நெல் அறுவடை செய்து இருபத்தி இரண்டு நாள்களாக கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் மக்கும் தன்மையை அடைந்து விடும். மேலும், நெல் கொள்முதல் நிலையம் என்பது விவசாயிகளுக்கு பாதகமாகவும், வியாபாரிகளுக்கு சாதகமாக உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் குவிண்டாலுக்கு இரண்டாயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னார். அதில் நூறு ரூபாய் அலுவலர்கள் லஞ்சமாக கேட்கிறார்கள். அது குறித்து திருச்சி மண்டல காவல்துறைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் தலையிட்டு உடனடியாக தேக்கமடைந்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இருநூறு டிராக்டர்களில் முதலமைச்சர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெற்றோரை இழந்த மாணவர்கள் - தேடிச்சென்று உதவிய அரசு பள்ளி ஆசிரியர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.