ETV Bharat / city

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்க வேண்டும் - பிஆர்.பாண்டியன் - prpandiyan

கர்நாடகாவிடம் இருந்து 40 டிஎம்சி நீரை பெற்றுத்தர காவிரி மேலாண்மை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மேட்டூர் அணையில்
மேட்டூர் அணையில்
author img

By

Published : Jun 26, 2021, 7:54 PM IST

திருவாரூர் : தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூர் மாவட்டம் கோட்டூர்,முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதிகளில் தண்ணீர் இன்றி விளைநிலங்கள் பாலைவனமாக காட்சி அளிப்பதை நேரில் சென்று பார்வையிட்டார்.

விவசாயிகள் வேதனை

பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு நேரடி விதைப்பு நடவு நடுவதற்கு நாற்று விடும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. தண்ணீரின்றி நடவு பணி மேற்கொள்ள முடியாமலும் விதைத்த நெல் மணிகள் முளைக்காமல் கருகி வருவதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கூடுதல் நீர் திறக்க வேண்டும்

எனவே மேட்டூரிலிருந்து 18 ஆயிரம் கனஅடி நீரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுவரை 10,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுவதால் ஆறுகளில் மட்டும் கடைமடைக்கு தண்ணீர் சென்றிருக்கிறதே தவிர, எந்த ஒரு கிராமத்திற்கோ, விளை நிலங்களுக்கோ நீர் செல்ல்வில்லை. இதனால் நிலங்கள் பாலைவனமாக காட்சி அளிக்கிறது. மேலும் காவிரி நீரை பெறுவதற்கு முதலமைச்சர் ஆணையத்திற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று 25.06.2021 நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதத்திற்கான 40 டிஎம்சி நீரை உடனடியாக கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு ஆணையத்தின் வேலை முடிந்ததாக நினைக்கக் கூடாது. உடனடியாக கண்காணிப்புக்குழு நேரடியாகப் கர்நாடகாவில் பார்வையிட்டு தமிழகத்திற்கு தேவையான நீரை பெற்றுத் தருவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

நீரை பெற நடவடிக்கை தேவை

ஏனெனில் கடந்த ஆண்டு மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் ஏற்கவில்லை. காலம் கடந்து உபரி நீரை திறந்து ஆணைய உத்தரவை நிறைவேற்றியதாக கணக்கு காட்டி இருக்கிறதே தவிர, உரிய காலத்தில் நீர் வழங்கவில்லை. எனவே ஆணையம் விழிப்போடு செயல்பட்டு நீரை பெற்றுக் கொடுத்தால் இந்த ஆண்டு குறுவை சாகுபடியும், சம்பா சாகுபடியும் தமிழகத்தில் மேற்கொள்ள முடியும், இல்லையேல் விவசாயம் அழிந்து போகும் என எச்சரிக்கிறேன்" என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க ;மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.