ETV Bharat / city

நீட்: வேண்டாம்னு சொல்லியும் திமுக அதைச் செஞ்சாங்க, ஆதாரம் இருக்கு - எடப்பாடி - Edappadi Palaniswamy in Trichy

கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனியாகப் போட்டியிட திராணி இல்லாத கட்சி திமுக, தனியே நெஞ்சை நிமிர்த்தி தேர்தலை எதிர்கொள்கிறது அதிமுக எனத் திருச்சியில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

இபிஎஸ்
இபிஎஸ்
author img

By

Published : Feb 15, 2022, 10:18 PM IST

Updated : Feb 15, 2022, 11:05 PM IST

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

9 மாதத்திலேயே திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தி

இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திருச்சி மாநகரம் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் வெற்றிபெற இரவு-பகலாக உழைக்க வேண்டும். ஸ்டாலின் நம் தொண்டர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டுவருகிறார் - இதற்கு எல்லாம் பயந்தவர்கள் நாங்கள் அல்ல.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவைத் தாக்கினார்கள். அப்போது, 'நான் இனி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் உள்ளே நுழைவேன்' என்றார், அதேபோல் பதவி ஏற்றார். ஸ்டாலின் அவர்களே இது உழைப்பால் உயர்ந்த கட்சி - எதையும் சந்திக்க எங்களுக்குத் திராணி உள்ளது.

திமுகவின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். இருபெரும் தலைவர்கள் செய்த சாதனைகளை நாங்கள் எடுத்துக் கூறிவருகிறோம் - நீங்களும் செய்ததைக் கூறுங்கள், அதை விட்டுவிட்டு மிரட்டுவது, பொய் வழக்குகளைப் போட்டுவருகின்றார்கள். மக்கள் ஒன்பது மாதத்திலேயே அதிருப்தியில் உள்ளனர்.

ஏவல் துறையாக மாறிய தமிழ்நாடு காவல் துறை

மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை, மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். கூட்டணி இல்லாமல் நிற்க திராணி இல்லாத கட்சி திமுக - தில்லு இருந்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் நின்று பாருங்கள்.

மக்கள் இடத்திலிருந்து அவர்கள் கேட்க வேண்டியதை நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து கேட்கிறோம். கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததைக் கண்டுபிடித்ததே அதிமுகதான். பொய் பேசி தப்பிக்க முடியாது ஸ்டாலின் அவர்களே.

குற்றவாளிகளுக்கு என்றும் நாங்கள் துணைபோக மாட்டோம், காவல் துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக இருந்தார்கள். இப்போது ஏவல் துறையாக மாறியுள்ளது. அதிமுக ஆட்சியில் காவல் துறையினருக்கு மதிப்பு இருந்தது.

அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்த திமுக

காவல் துறையினர் நடுநிலையோடு இருங்கள், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையை வைத்துக்கொண்டு வழக்குப் போடுவது, பிரச்சினை செய்வது என ஈடுபட்டுவருகிறார்கள் திமுகவினர். படித்தவர்களைக்கூட ஏமாற்றிய கட்சி திமுக.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவோம், ஆனால் திமுக ஆட்சியில் வழங்கப்பட மாட்டாது என்று நிதி அமைச்சர் தெரிவித்துவிட்டார். நம்பிக்கைத் துரோகம் என்பது திமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல - அரசு ஊழியர்களுக்கு உரிய மரியாதையை அதிமுகதான் கொடுத்துவந்தது.

திருச்சியில் ஸ்மார்ட் திட்டத்தின்கீழ் 14 பூங்கா, பல இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டம், உய்யகொண்டான் கரைகள் பாதுகாக்க 18 கோடி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது, முக்கொம்பு புதிய மேலனை, அரசு மகளிர் தோட்டக்கல்லூரி இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மத்திய அரசு குறைத்தும் பெட்ரோல் விலையைக் குறைக்காத திமுக அரசு

தேர்தலின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தனர். இதில் 400 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டது என ஸ்டாலின் கூறுகிறார். 90 விழுக்காடு நிறைவேற்றப்பட்டது என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். அப்பா 70 விழுக்காடு என்கிறார், மகன் 90 விழுக்காடு என்கிறார்.

பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் குறைத்து டீசல் குறைக்கவில்லை, மத்திய அரசில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்த பின்னர் இந்தியாவில் 25 மாநில முதலமைச்சர்கள் பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்துள்ளனர், ஆனால் திமுக குறைக்கவில்லை.

திமுகவை நம்பி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மக்கள் தங்கள் நகையை வைத்துப் பணத்தை வாங்கி செலவுசெய்தனர். ஆனால் 43 லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்கு தான் தள்ளுபடி என்று கூறிவிட்டனர். 35 லட்சம் பேர் கட்டும் வட்டியை வாங்கி 13 லட்சம் வாங்கிய கடனை ரத்துசெய்கின்றனர்.

இனி பொங்கல் வந்தாலே ஸ்டாலின் ஞாபகம்தான் - திமுகவை காக்கும் ஊடகம்

விஞ்ஞான ரீதியில் ஏமாற்றும் கட்சி திமுக. திமுகவிற்கு ஓட்டு போட்டதற்கு தண்டனை வட்டி கட்ட வேண்டும் - அதிமுக அரசு 2500 ரூபாய் கொடுத்தோம், ஆனால் இந்த ஆண்டு 21 பொருள் தருகிறோம் என்றார்கள். பொங்கல் தொகுப்பில் புளியில் பல்லி செத்துக் கிடக்குது.

பிரமாண்டமான வெல்லம் கொடுத்தார்கள்... தைப்பொங்கல் வரும் போதெல்லாம் ஸ்டாலின் ஞாபகம்தான் வரும் - ஒழுகும் வெல்லம். ஊடகம் மட்டும்தான் இப்போது திமுகவைக் காப்பாற்றுகின்றது. ஊடகம் கைவிட்டால் ஒன்றுமே இல்லை திமுகவிற்கு.

உடற்பயிற்சி, சைக்கிள் பயிற்சி தேவைதான். ஆனால் ஏன் அதை தினமும் ஊடகத்தில் போட வேண்டும். நீட் குறித்து விவாதிக்க நாங்கள் தயார் - இபிஎஸ், ஓபிஎஸ் தயாரா என்று கேட்டார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் என்ற நச்சு விதை கொண்டுவரப்பட்டது.

கொஞ்சநஞ்ச நன்மதிப்பையும் திமுக இழக்க வேண்டாம்

மறு சீராய்வு மனு போட வேண்டாம் என்று ஜெயலலிதா கூறினார், ஆனால் அதை கேட்காது திமுக, காங்கிரஸ் மனுவைப் போட்டார்கள். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நகல் என் கையில் உள்ளது. ஆதாரத்துடன் நான் பேசுகிறேன் - எனவே கொஞ்சம்நஞ்சம் நன்மதிப்பையும் திமுக இழக்க வேண்டாம்.

7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு மருத்துவக் கல்வியில் கொண்டுவந்து அவர்களுக்கு மருத்துவக் கல்வி கட்டணமும் இல்லை என்றது அதிமுகதான். திருச்சி மாநகராட்சி மேயர் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

அதற்கு நமக்குள் இருக்கும் சிறு, சிறு பிரச்சினைகளை எல்லாம் நாம் மறக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தீய சக்தியை நாம் அழிக்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க: 'திமுகவின் வாக்குறுதியை நம்பி கடனாளியான 37 லட்சம் பேர்!'

Last Updated : Feb 15, 2022, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.