ETV Bharat / city

தலைமையாசிரியரின் விழிப்புணர்வு பாட்டுக்கு 'செம' டான்ஸ் ஆடிய மங்கைகள்! - ஆசிரியர்-பெற்றோர்கள் கூட்டமைப்பு

துவாக்குடி வடக்கு மலையில் இன்று (ஏப்.24) பள்ளி மேலாண்மை குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் குறித்த அறிவிப்புகளுக்குப் பின்னர், ஆசிரியர்-பெற்றோர்கள் கூட்டமைப்பு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெற்றோர்கள் டான்ஸூ
பெற்றோர்கள் டான்ஸூபெற்றோர்கள் டான்ஸூ
author img

By

Published : Apr 24, 2022, 7:54 PM IST

திருச்சி: துவாக்குடி வடக்கு மலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழ்நாடுஅரசின் வழிகாட்டுதலின்படி, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் தலைமை வகித்தார்.

திருவெறும்பூர் தனி வட்டாட்சியர் கண்ணன் தேர்தல் பார்வையாளராகக் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்கெடுப்பு முறையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்வான பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. புதிய உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
இதனைத் தொடர்ந்து, பெற்றோர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற விழிப்புணர்வு பாடலை தலைமையாசிரியர் கருணாம்பாள் எழுதி, அவரே மேடையில் பாடினார்.
இதற்கு பெற்றோர்கள் நடனமாடினார். இதில் வார்டு கவுன்சிலர் நர்மதா, கல்வியாளர் சந்திரசேகர், தன்னார்வலர் ராஜா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சதுரங்க விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் பள்ளி மாணவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.