திருச்சி: தேர்தல் என்றால் போட்டி என்பது இருக்கத்தான் செய்யும். ஆனால், இம்முறை போல இப்படி கூட்டணிகள் சிதறியது இல்லை. அப்படியே கூட்டணியில் தொடர்ந்தாலும், மனக் கசப்போடும் வேண்டா வெறுப்போடும்தான் வேலை செய்கிறார்கள்.
திருச்சி திமுக மாநகராட்சித் தேர்தலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் இன்றைய நிலவரத்தைச் சிறிது பார்ப்போம்
திமுகவில் கோஷ்டி பூசல்
நேருவின் அணியைச் சேர்ந்தவர்களை முதலில் முன்னாள் துணைமேயர் அன்பழகன், 27ஆவது வார்டில் போட்டியிடுகிறார். வென்றால் இவர்தான் மேயர் என அமைச்சர் நேரு தரப்பு சொல்லிவருகிறது. அதிருஷ்ட காற்று அவர் பக்கம் நன்றாகவே வீசுகிறது.
4ஆவது வார்டு ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் மனைவி ஆண்டாள். கட்சியினரே இவருக்கு எதிராக வைரல் வீடியோவை வெளியிட்டுவருகின்றனர்.
வென்றால் பகுதிச் செயலாளர் மனைவிதான்; ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவராம். எவர்கிரீன் நேருவின் வலதுகரங்களில் உள்ள விரல்களில் ஒருவர் 60ஆவது வார்டில் போட்டியிடும் காஜாமலை விஜய், 22ஆவது வார்டில் நேருவின் நிழலாக இருந்த கண்ணனின் மனைவி விஜயலெட்சுமி, 57ஆவது வார்டில் முத்துச்செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நேருவின் நிழலாக இருந்தவர்தான் முத்துச்செல்வம். இவரும் பகுதிச்செயலாளர் ராம்குமாரும் பேசிய ஆடியோ ஒன்று சட்டப்பேரவைத் தேர்தலின்பொழுது வைரலாக கட்டம் கட்டி வைக்கப்பட்டிருந்தவருக்கு இப்பொழுது சீட்டு, இவர்களோட சிலபல ஆண்டுகளாக மேயர் கனவுகளோட மாநகரில் வலம்வந்த விஜயா ஜெயராஜும் ஒருவர். தூங்கிக்கொண்டு இருந்தவரைத் தட்டி எழுப்பி சீட் கொடுத்திருக்கிறார்கள்.
அன்பில் மகேஷ் அணி
11ஆவது வார்டில் விஜயா ஜெயராஜ் கேட்டரிங் கல்லூரி, பேருந்துகள் என ஓடினாலும் தேர்தலில் ஓட விருப்பம் இல்லாதவரைக் கட்டாயப்படுத்தி நிற்கவைத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
அன்பில் மகேஷ் அணியில் 16ஆவது வார்டில் மதிவாணன் நிற்கிறார். இளைய அன்பிலாரின் அன்பைப் பெற்றவர்; மகேஷ் தரப்பு இவர்தான் மேயர் என அடித்துக்கூறுகிறார்கள்.
மலைக்கோட்டை பகுதிச்செயலாளராகவும் இருக்கிறார். 40ஆவது வார்டில் சிவா சேகரன் போட்டியிடுகிறார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சேகரனின் மகன் அப்பாவை நாசுக்காகக் கழற்றிவிட்டு, அவரது மகனைக் களமிறங்கச் செய்து தன்னுடைய பிரதாபத்தைக் காட்டியிருக்கிறார் மகேஷ் என்கிறார்கள்.
நான்குமுனைப் போட்டி
14ஆவது வார்டில் திருமாவளவன் நிற்கிறார். கட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே எப்படி இப்படி? வர்த்தக சங்கத்திலிருந்து பெருந்தொகை கைமாறியதற்கு கைங்கர்யம் என்கிறார்கள். இவரை எதிர்த்துச் சுயேச்சையாகக் களமிறங்குகிறார். தொடர் வெற்றி நாயகன் வேலு அத்தோடு அதிமுக சார்பாக இபிஎஸ்ஸின் அன்பை நேரடியாகப் பெற்ற அரவிந்தனும் களத்தில் இருக்கிறார்.
இவர் ஆவின் சேர்மன் கார்த்தியின் அன்புச்சகோதரர், ஏரியாவில் ஏக களேபரம்தான் அதேபோல மகேஷ் தரப்பில் ஏகப்பட்ட குளறுபடியாம். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? எனக் குமுறல் கேட்கிறது என்னத்த சொல்ல...
அணிகள் பிரிந்து கிடந்தால் பிணிகள் அதிகமாகும், ஒன்றாக இருந்தால் மட்டுமே மக்களுக்கான பணிகள் சிறக்கும்!
இதையும் படிங்க: 'தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் அதிமுகதான் வெல்லும்!'