திருச்சி: மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியைச் சேர்ந்தவர் பாஜக பிரமுகர் கண்ணன் (எ) அயோத்தி கண்ணன். இவர், தனது முகநூல் பக்கத்தில் நேற்று முன்தினம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் உயிரிழந்த மற்ற இராணுவ வீரர்களுக்கும் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவிற்கு அவரது முகநூல் நண்பர் கோபாலகிருஷ்ணன் என்பவர் பதில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், பிபின் ராவத் என்பவரால்தான் சீன ராணுவம் இந்தியப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்தார்கள் எனவும் மோடி சீன ராணுவத்தை விரட்டிவிட்டதாக இந்திய மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முப்படைத் தலைமை தளபதி, இந்திய ராணுவத்தில் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு செய்த செயல்களை கொச்சைப்படுத்தும் நோக்கிலும், பிரதமர் நரேந்திர மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தனது முகநூல் பதிவில், பதில் பதிவிட்ட கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து புகாரை ஏற்றுக்கொண்ட மணப்பாறை காவல் துறையினர் புகார் மீதான மனு ரசீது வழங்கி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிபின் ராவத் சர்ச்சை: இந்து மதம் மாறும் இஸ்லாமிய இயக்குநர்