திருச்சி பாலக்கரை பருப்புகார தெருவைச் சேர்ந்தவர் சதாம் உசேன்(27). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், திருச்சி தில்லைநகர் ரஹ்மானியாபுரத்தைச் சேர்ந்த பாத்திமா பேகம் (22) என்பவருக்கும் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பின் பாத்திமா பேகம் கர்ப்பமாக இருந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பிரசவத்திற்காகத் திருச்சி மாநகர் பீமநகர் பகுதியிலுள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இம்மாதம் 7ஆம் தேதி, காலை 8 மணிக்குச் சேர்த்தனர். அதனையடுத்து பாத்திமா பேகத்திற்கு மாலை 5.30 மணிக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையிலிருந்த செவிலியர்கள் பாத்திமா பேகத்திற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
பொருளாதாரத்தில் இந்தியா சறுக்கல்; அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் சிங்கை நாடு!
இந்நேரத்தில் குழந்தை வெளியே வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் செவிலியர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டனர். ஒரு கட்டத்தில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள உபகரணங்களைக் கொண்டு பிரசவம் பார்ப்பது கடினம் என்று செவிலியர்கள் முடிவெடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு பாத்திமா பேகத்தின் உறவினர்களிடம் செவிலியர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு பாத்திமா பேகத்தை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டுச் சென்றனர். அங்கு உடனடியாக பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. மேலும், பாத்திமா பேகத்திற்கு கர்ப்பப்பை காயம் ஏற்பட்டுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை, மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்... பிரபல பாலிவுட் ஹீரோவை டேக் செய்த டிவி தொகுப்பாளர் பாவனா
தகவலறிந்த உறவினர்கள், திருச்சி பீம நகரில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு செவிலியர்களிடமும், மருத்துவர்களிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கு பணியிலிருந்த காவலாளி ஒருவர், இந்த உறவினர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் அவரைத் தாக்க முற்பட்டனர்.
இதுகுறித்து பாத்திமாவின் கணவர் சதாம் உசேன் செய்தியாளரிடம் பேசுகையில், “ஏழாம் தேதி மாலை பிரசவ வலி வந்தவுடன், எனது மனைவியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் இங்கேயே வைத்து விட்டனர். அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னரும், அங்கிருந்து ஆரம்பச் சுகாதார நிலையத்தைத் தொடர்பு கொள்ள மருத்துவர்கள் முயற்சி செய்தனர்.
'பாரதிய ஜனதாவில் இணையவில்லை' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார் மனைவி!
ஆனால் இங்கு யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. ஏழைகள் ஆகிய நாங்கள் அரசு மருத்துவமனையை நம்பித்தான் வருகிறோம். இங்கே இந்த நிலை உள்ளது. மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் தான் பிரசவம் பார்த்தார்கள். மருத்துவர்கள் இல்லை என்றால் ஏன் இத்தகைய மருத்துவமனையைத் திறந்து வைத்திருக்க வேண்டும். குழந்தையும் இறந்துவிட்டது. தாயும் தற்போது மோசமான நிலையில் உள்ளார்.
ஆயுத பூஜையை முன்னிட்டு மருத்துவர்கள் விடுப்பில் உள்ளனர் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர். ஆயுதபூஜைக்கு மருத்துவமனைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கின்றனர். பிரசவம் பார்த்த போது குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு உள்ளது. இதன் காரணமாகத் தான் எனது குழந்தை இறந்துள்ளது.
பலர் குழந்தை இல்லாமல் தவித்து வரும் நிலையில் நாங்கள் குழந்தையைப் பறிகொடுத்து தவிக்கிறோம். எங்களுக்கு ஏற்பட்டது போல் வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக் கூடாது” என்று கதறியபடி, அவர் பேசியதைக் கவனித்த அக்கம்பக்கத்தினரின் கண்களில் கண்ணீர் தேங்கி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.