ETV Bharat / city

பழங்குடியினருக்கு 9% இட ஒதுக்கீடு வேண்டும் - அய்யாக்கண்ணு கோரிக்கை

திருச்சி: பழங்குடியினருக்கு மத்திய அரசு 9% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு
author img

By

Published : Nov 3, 2019, 5:01 PM IST

சீர்மரபினர் நல சங்கம் சார்பில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பழங்குடியினத்தைச் சேர்ந்த 68 சாதியினர் இங்கே கூடியிருக்கிறோம். பூர்வ குடிமக்களாகிய நாங்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து அரிவாள், கம்பு, ஈட்டி உள்ளிட்டவையுடன் போரிட்டு ஓடஓட விரட்டி அடித்தோம். அதனால் எங்களைக் குற்றப்பரம்பரை என்று ஆங்கிலேயர்கள் கூறிவிட்டனர்.

திணறும் தலைநகர் - அபாய கட்டத்தில் காற்று மாசுபாடு!

ஆனால் தற்போது நாங்கள் பழங்குடியின சான்றிதழ் வாங்கி வைத்துள்ளோம். அதனால் எங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், எங்களுக்கு 9 விழுக்காடும், மாநில அரசு 10 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு

இல்லையென்றால் வரும் தேர்தலில் இவர்களை எதிர்த்து வேலை செய்வோம். சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகள் நாங்கள். தமிழ்நாடு முழுவதும் 1.5 கோடி பேரும், இந்தியா முழுவதும் 13 கோடி பேரும் உள்ளனர். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பழங்குடியின சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.

Intro:சீர்மரபினருக்கு மத்திய அரசு 9% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.Body:
திருச்சி:
சீர்மரபினருக்கு மத்திய அரசு 9% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீர்மரபினர் நல சங்கம் சார்பில் சீர் மரபினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 68 ஜாதியினர் இங்கே கூடியிருக்கிறோம் குடிமக்களாகிய நாங்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து அரிவாள் கம்பு ஈட்டி ஓட விரட்டி அடித்தோம் அதனால் எங்களை குற்றப்பரம்பரை என்று ஆங்கிலேயர்கள் கூறிவிட்டனர் ஆனால் தற்போது நாங்கள் பழங்குடியின சான்றிதழ் வாங்கி வைத்துள்ளோம் அதனால் எங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் எங்களுக்கு இட 9 சதவீதமும், மாநில அரசு 10% இட ஒதுக்கீடு அங்க வேண்டும் இல்லையென்றால் வரும் தேர்தலில் இவர்களை எதிர்த்து வேலை செய்வோம் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகள் நாங்கள் எங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் தமிழகம் முழுவதும் 1.5 கோடி பேரும் இந்தியா முழுவதும் 13 கோடி பேர் உள்ளனர் அதே போல் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பழங்குடியின சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.