ETV Bharat / city

பீச்சியடித்த குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தி - குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திருச்சி: மணப்பாறை அருகே கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பீச்சியடித்த குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தி
author img

By

Published : Aug 31, 2019, 3:33 PM IST

கரூர் மாவட்டம் கீழவதியத்திலிருந்து மணப்பாறை, துவரங்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் சுமார் மூன்று அடி விட்டம் கொண்ட குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் 30 அடி உயரத்திற்கு பீச்சியடித்தது.

பீச்சியடித்த குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தி

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, குழாயிலிருந்து வெளியேறிய நீர் மதுரை செல்லும் சாலையில் ஆறாக ஓடியது. அவ்வழியே சென்றவர்கள் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் மேலெழும்பிய காட்சியை கண்டு ரசித்தவாறு சென்றனர். இதனையடுத்து நீர் உந்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

மேலும், குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்கி மீண்டும் நீர் ஏற்றம் செய்ய ஓரிரு நாட்கள் ஆகுவதற்கு வாய்ப்புள்ளதால் துவரங்குறிச்சி வரையிலான கிராமப் பகுதிகளுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, மணப்பாறை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:மணப்பாறை அருகே கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் திடீர் உடைப்பு - சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்.Body:கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கீழவதியத்திலிருந்து மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளுக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் சுமார் 3 அடி விட்டம் கொண்ட குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் 30அடி உயரத்திற்கு பீச்சியடித்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக, குழாயில் குடிநீர் செல்லுகின்ற அழுத்ததின் காரணமாக லட்சக்கணக்கான நீர் வெளியேறி மதுரை செல்லும் சாலையில் ஆறாக ஓடியது. அவ்வழியே சாலையில் சென்ற வாகன 30 அடி உயரத்திற்கு தண்ணீர் மேலெழும்பிய காட்சியை கண்டு ரசித்தவாறு சென்றனர். இதனையடுத்து உடனடியாக அருகில் நீர் உந்து நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடனடியாக தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. மேலும் குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்கி மீண்டும் நீர் ஏற்றம் செய்ய ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துவரங்குறிச்சி வரையிலான கிராமப்பகுதிகளுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மணப்பாறை பகுதியில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.