ETV Bharat / city

மூன்றாம் தலைமுறை தலைவராக வரவுள்ளவர் உதயநிதி ஸ்டாலின்... அமைச்சர் பொன்முடி... - Behalf of DMK Party Great Festival

மணப்பாறையில் நடந்த விழாவில் திமுக என்பது தலைமுறை தலைமுறையாக மக்களுக்காக உழைக்கும் கட்சி. மூன்றாம் தலைமுறை தலைவராக வரவுள்ளவர் உதயநிதி ஸ்டாலின். இந்த கட்சியை உதயநிதி வளர்த்தெடுப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
author img

By

Published : Aug 29, 2022, 1:49 PM IST

திருச்சி: மணப்பாறையில் நேற்று நடந்த திமுகவின் ஐம்பெரும் விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளிகள் வழங்கி கௌரவித்தார். அதன்பின் மணப்பாறை திமுக நகர்மன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். குறிப்பாக மறைந்த முன்னாள் அமைச்சர் பொய்யாமொழியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர் பொன்முடி திமுக ஐம்பெரும் விழாவில் பேச்சு

இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என் நேரு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், எம்.பி. ஜோதிமணி, எம்எல்ஏக்கள் அப்துல் சமது, பழனியாண்டி, திருச்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "திமுக என்பது தலைமுறை தலைமுறையாக மக்களுக்காக உழைக்கும் கட்சி திமுக, மூன்றாம் தலைமுறை தலைவராக வர உள்ளவர் உதயநிதி ஸ்டாலின், அவர் இந்த கட்சியை மேலும் வளர்த்தெடுப்பார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருப்பார்...வைகோ உருக்கம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.