ETV Bharat / city

'எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு' - அய்யாக்கண்ணு

திருச்சி: விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே எங்கள் ஆதரவு என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே எங்கள் ஆதரவு -அய்யாக்கண்ணு
author img

By

Published : Apr 21, 2019, 2:10 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, மாநிலப் பொதுச்செயலாளர் பழனிவேல், மாநிலத் துணைத் தலைவர்கள் செந்தில், குமாரசாமி, முருகேசன், ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘எங்கள் சங்கம் எந்தக் கட்சியையும் சாராத சங்கம். நதிநீர் இணைப்பு, விவசாயப் பொருட்களுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளுபடி, இறக்குமதிக்கு தடை, அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்குதான் ஆதரவு’ என தெரிவித்தார்.

Intro:தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது.

Body:திருச்சி : அரசியல்வாதிகள் எங்களை போட்டு புளிஞ்சு எடுக்கிறார்கள் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வேதனையுடன் கூறினார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பழனிவேல், மாநில துணைத் தலைவர்கள் செந்தில் குமாரசாமி, முருகேசன் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு பின்னர் ஐயாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில்,
எங்கள் சங்கம் எந்த கட்சியையும் சாராத சங்கம். விவசாயிகளின் பிரச்சினையை தான் எங்களது தலையாய பிரச்சனை. ஆனால் அரசியல்வாதிகள் எங்களை போட்டு புளிகிறார்கள். நதிநீர் இணைப்பு, விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளுபடி, இறக்குமதிக்கு தடை. மரபணு மாற்று விதைகளை பயன்படுத்தி மக்களை மலடாக்கக்கூடாது, பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் என்ற எங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கிறோம்.
அதற்காக அந்த கட்சியில் இணைவது எங்களது நோக்கம் அல்ல. திமுக, காங்கிரஸ் தூண்டுதலின் பேரில் தான் நாங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தியதாக கூறுகிறார்கள். கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்று நாங்கள் கூறினால் பணம் வாங்கி விட்டதாக எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். பணம் வாங்கியே பழக்கப்பட்ட அரசியல்வாதிகள் எங்களைப் பற்றி கேவலமாக பேசுகிறார்கள். எங்கள் மீது அவதூறாக பேசியோர் மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வரும் 23-ஆம் தேதி சென்னையில் போலீஸ் டிஜிபி யை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம். சைபர் கிரைமில் புகார் அளிக்க உள்ளோம். விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் பிஆர் பாண்டியன், வெங்கடேசன், நல்லுசாமி ஆகியோர் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
17 வாய்க்கால்களை நம்பி வாழை, கரும்பு போன்ற ஆண்டு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பல லட்சங்களை செலவிட்டு பயிர் செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டியது அரசின் கடமை. அப்படி செய்யவில்லை என்றால் விவசாயிகளை கழுத்தை அறுப்பதற்கு சமம் ஆகும் என்றார்.

Conclusion:வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வில்லை என்றால் விவசாயிகளின் கழுத்தை அறுப்பதற்கு சமம் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.