தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது . இதற்கான அறிவிப்பு ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த வகையில் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யும் பணி முடிவடைந்து இறுதி பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதோடு வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் விருது வழங்க உள்ளது.
இதற்கான விருது பெறும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு முதல் இடத்தை பிடித்துள்ளார். வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் திறம்பட செயல்பட்டதற்காகவும், புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகவும் மாநில அளவிலான சிறந்த தேர்தல் அலுவலர் விருதுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஏ.அண்ணாதுரை இரண்டாமிடமும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.