ETV Bharat / city

'உடும்பு மை வாங்கலையோ!' - காணொலி பதிவிட்ட ஜோதிட வித்தகர் கைது - Monitor lizard Ink preparation

திருச்சி: உடும்பில் மை தயாரித்து யூடியூப்பில் காணொலி பதிவிட்ட ஜோதிட வித்தகர் பெரியசாமி வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஜோதிடத்தில் தேர்ந்ததாக தன்னை காட்டிக் கொண்ட இவரால், தான் கைதாவதை கணிக்க முடியாமல் போனதே என்று பொதுமக்கள் எள்ளி நகையாடினர்.

ஜோதிட  வித்தகர் கைது
ஜோதிட வித்தகர் கைது
author img

By

Published : Jun 2, 2020, 3:00 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணியங்குறிச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி(29). இவர் கடந்த ஒரு வருட காலமாக அகஸ்தியர் ஜோதிட நிலையம் நிறுவி ஜோதிடம் பார்த்து வருகிறார். மேலும் தனக்கு சொந்தமாக யூடியூப் பக்கம் ஒன்றையும் வைத்து அதில் வீடியோக்கள் பதிவிட்டு வந்துள்ளார்.

பவுர்ணமி மயான பூஜை செய்வது ஏன்? இலவசமாக ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் - மோடியா? ராகுல் காந்தியா? 2024மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்? உள்ளிட்ட இவருடைய காணொலிகள் பிரபலமானவை.

உடும்பில் மை தயாரிப்பது குறித்து பெரியசாமி வெளியிட்ட காணொலி

இந்நிலையில், இவர் ஆறு மாதத்திற்கு முன்பு உடும்பை அரைத்து வசிய மை செய்வது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொலி குறித்து வனத்துறையினருக்கு புகார் வந்தது.

பெரியசாமியை கைது செய்த வனத்துறையினர்
பெரியசாமியை கைது செய்த வனத்துறையினர்

இதனையடுத்து துவரங்குறிச்சி உதவி வன பாதுகாவலர் சுப்பிரமணி, வனவர் முகமது அயிஸ் அலி, வனக்காப்பாளர்கள் செல்வேந்திரன், பிரசாந்த் ஆகியோர் பெரியசாமியிடம் ஜோதிடம் பார்ப்பது போல் சென்று அவரை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனால் ஜோதிட வித்தைகள் தெரிந்த பெரியசாமிக்கு தான் கைதாவதை கணிக்க முடியாமல் போனதே என்று பொதுமக்கள் எள்ளி நகையாடினர்.

இதையும் படிங்க; கரோனா குறித்து 8 மாதங்களுக்கு முன்பே கணித்த ஜோதிட சிறுவன்: சந்தோஷ் சிவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.