திருச்சி: மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டியில் சுயஉதவிக்குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. 12 பேர் கொண்ட இந்த குழுவின் தலைவியாக இராஜலட்சுமி என்பவர் உள்ளார்.
இவர் தனது குழுவிற்கு ரூ 5 லட்சம் நிதி கேட்டு மணப்பாறை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்க மேலாளர் மல்லிகாவிடம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் குழுவிற்கு நிதி பெறுவதற்கான திட்ட வரையறை தயார் செய்வதற்காக குழு தலைவி இராஜலட்சுமியிடம் மேலாளர் மல்லிகா ரூ 12000 பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதையடுத்து இராஜலட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகாரளித்துள்ளார். பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய 12 ஆயிரம் ரூபாயை வாழ்வாதார இயக்க மேலாளர் மல்லிகாவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மல்லிகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடித்த நகைகள் முழுவதுமாக மீட்பு