திருச்சி: துவரங்குறிச்சி அருகே முக்கண்பாலம் என்னுமிடத்தில் உள்ள சிவாலயத்தில் நேற்று டிச. 11 ஆம் தேதி, காலை சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் நபர் முகத்தில் தாக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி அப்பகுதி பொதுமக்களிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் சைக்கிளில் திரிந்ததாகவும், மூட்டைகளுடன் ஆற்றுப் பகுதிக்குள் தங்கியிருந்ததைப் பார்த்ததாகவும் கூறியுள்ளனர்.
காவல்துறை விசாரணை
மேலும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் சிவாலயத்திற்கு அவர் எப்படி வந்தார்? எப்போது வந்தார்? என தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். இதையடுத்து, இறந்த நபர் யார்? எதற்காகக் கொலை செய்யப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாகக் கட்டப்பட்டு வரும் சிவாலயத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததால் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெதர்லாந்து, கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்திவந்த போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்