ETV Bharat / city

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை அளிக்காததால் இந்து முன்னணியினர் வெறிச்செயல்! - திருப்பூர்

திருப்பூர்: விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை அளிக்காத காரணத்தால் இந்து முன்னணியினர் விநாயகர் ஊர்வலத்தின்போது அத்துமீறி பின்னலாடை நிறுவனத்திற்குள் நுழைந்து சேதப்படுத்தி ஊழியர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vinayakar chathuruthi donation
author img

By

Published : Sep 6, 2019, 11:22 AM IST

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தை நடத்திவருபவர் சுரேஷ். அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியினர் சிலர் நன்கொடை கேட்டுச் சென்றுள்ளனர்.

அப்போது பத்தாயிரம் ரூபாய் பணத்தை கேட்டு வற்புறுத்தியதால் சுரேஷ் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. அங்கேரிபாளையம் பகுதியில் விநாயகர் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்த இந்து முன்னணியினரில் சிலர் அத்துமீறி பின்னாலாடை நிறுவனத்திற்குள் புகுந்து காவலாளியை தாக்கியுள்ளனர்.

நன்கொடை அளிக்காததால் இந்து முன்னணியினர் வெறிச்செயல்

பின்னர் விநாயகர் சிலையை கொண்டுசென்ற வாகனத்தை மேள தாளங்களுடன் நிறுவனத்திற்குள் கொண்டுவந்து தகராறு செய்துள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட பின்னலாடை நிறுவன ஊழியர்களை இரும்புக் கம்பிகளை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் நான்கு பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விநாயகர் சிலையுடன் நுழைந்து இந்து முன்னணியினர் செய்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் பின்னலாடை நிறுவன உரிமையாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராத காரணத்தால் இந்து முன்னணியினர் விநாயகர் ஊர்வலத்தின் போது அத்துமீறி தனியார் பின்னலாடை நிறுவனத்தில் விநாயகருடன் நுழைந்து கம்பெனியை சேதப்படுத்தி ஊழியர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Body:திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை பகுதியில் சுரேஷ் என்பவர் தனியார் பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருகிறார் அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக அப்பகுதியை சேர்ந்த இந்து முன்னணியினர் சிலர் நன்கொடை கேட்டு சென்றுள்ளனர் உரிமையாளர் சுரேஷ் இல்லாததால் நிறுவன ஊழியர்கள் பணம் தர மறுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்து முன்னணியினர் சுரேஷிடம் பத்தாயிரம் கேட்ட வற்புருத்திய நிலையில் சுரேஷ் பணம் கொடுக்க மறுத்துள்ளார் . இந்நிலையில் நேற்று திருப்பூர் மாநகரம் முழுவதும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது அப்போது அங்கேரிபாளையம் சாலையில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்த இந்து முன்னணியினர் சிலர் அத்துமீறி சுரேஷ் அவர்களின் பின்னாலாடை நிறுவனத்தில் புகுந்து காவலாளியை தாக்கியதோடு விநாயகர் சிலை கொண்டு சென்ற வாகனத்தை மேள தாளங்களுடன் நிறுவனத்தில் அத்துமீறி கொண்டுவந்து பிரச்சினை செய்துள்ளனர் இதைத் தட்டிக்கேட்ட பின்னலாடை நிறுவன ஊழியர்களை அங்கிருந்த இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கியுள்ளனர் மேலும் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளை கற்களை கொண்டும் பூச்செடிகளை கொண்டும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர் இதில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சிவக்குமார் உட்பட 4 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.நன்கொடை தர மறுத்த காரணத்தால் பின்னலாடை நிறுவனத்தில் அத்துமீறி வினாயகர் சிலையுடன் நுழைந்த இந்து முன்னணியினர் செய்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இதனையடுத்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.