திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தில் உள்ளது மாகாளியம்மன் கோயில். இந்த கோயிலின் பொங்கல் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடந்த தீர்த்தக்குடம் ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார் உள்ளிட்ட திரளானோர் தீர்த்தக்குடம் எடுத்தனர்.
அப்போது, ஊர்வலத்தில் எம்எல்ஏ விஜயகுமார் தீர்த்தக் குடத்தை தலையில் வைத்து கைகளில் வேப்பிலையை எடுத்துக்கொண்டும் சாலையில் உற்சாகமாக ஆடினார். அந்த பகுதியின் மொடா மேளத்துக்கு ஏற்ப எம்எல்ஏ ஆடியதை பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.
தனது சொந்த ஊர் கோயில் விழாவுக்காக எம்எல்ஏ தீர்த்தக்குடம் எடுத்து நடனம் ஆடியது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: