ETV Bharat / city

'கிராமங்களை சிறந்த ஊராட்சியாக மாற்றுங்கள்' - மாவட்ட ஆட்சியர்கள் கோரிக்கை! - தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்பு

திருப்பூர்: தமிழ்நாடு முழுவதும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

union meeting
union meeting
author img

By

Published : Jan 23, 2020, 12:23 PM IST

தமிழ்நாடு முழுவதும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

நாமக்கல்: தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 'உள்ளாட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அலுவலர்களும், புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளும் பிரதிபலன் பாராமல் மக்கள் பணியாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் மல்லசமுத்திரம், எருமப்பட்டி, எலச்சிபாளையம், கொல்லிமலை, கபிலர்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்: பல்லடம் அருள் புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சிக் கூட்டத்தினை திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சி முகாமில் கிராம ஊராட்சி அமைப்புகள், கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு வரையறை செய்யப்பட்டுள்ள முக்கியக் கூறுகள், பயணப்படி அமர்வு, கிராம ஊராட்சி கடமைகளும் பொறுப்புகளும் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பற்றியும் ஊராட்சித் தலைவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

சிறப்பு பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை: கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஒருநாள் பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் திமுகவினர் வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களுக்கு உரிய மரியாதை மற்றும் இருக்கைகள் கொடுக்கவில்லை எனக் கூறி, திமுகவைச் சேர்ந்த திருவண்ணாமலை ஒன்றியத் தலைவர் கலைவாணி, கலைமணி மற்றும் ஒன்றிய துணைத் தலைவர் பாரதி, ரமணன் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: ஒரு நாளில் 40, சில வாரங்களில் 150: மாஸ் காட்டும் ஆப்கன் ராணுவம்

Intro:உள்ளாட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளும், புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளும் பிரதிபலன் பாராமல் மக்கள் பணியாற்ற வேண்டும் என புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் பேச்சு.Body:நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெறும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் துவக்கி வைத்து பயிற்சி கையேட்டினை வெளியிட்டு பேசினார். அப்போது நாமக்கல் மாவட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் முதன்மையாக மாவட்டமாக விளங்கியதாகவும், தற்போது அது 17-ம் இடம் வகிப்பதாகவும், இந்த நிலை மாற உள்ளாட்சி துறை அதிகாரிகள் அலட்சிய போக்கோடு செயல்படாமல் அரசின் நலத்திட்டங்களை முழுமையாக மக்களுக்கு சென்றடையும் வகையில் பாடுபட வேண்டும் என்றும், அதே போல் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளும் எவ்வித பிரதிபலனும், பாரபட்சமும் இல்லாமல் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு சென்றடைய பாடுபட வேண்டும் என கேட்டு கொண்டார். இக்கருத்தரங்கில் இந்திய அரசியலமைப்பில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிலைப்பாடு, அங்கீகாரம், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவரின் பொறுப்புகள், கடமைகள், கிராம சபை, கிராம நிலைக்குழுக்கள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் மல்லசமுத்திரம், எருமப்பட்டி, எலச்சிபாளையம், கொல்லிமலை, கபிலர்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.