திருப்பூர் மாவட்டத்தி உள்ள 236 டாஸ்மாக் கடைகளுக்கான பார் ஏலம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏலம் எடுக்க வந்த பார் உரிமையாளர்கள், ஏலத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரனிடம் முறையிட்டனர்.
இதையடுத்து, திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்த எம்எல்ஏ குணசேகரன், ஏலத்திற்கான பெட்டி வைக்கப்படாமல் முறைகேடாக பெறப்பட்டதாகக் கூறப்பட்ட விண்ணப்பங்களை பார்வையிட்டனர். அதில் முறைகேடாக பூர்த்தி செய்யப்பட்ட 25 விண்ணப்பங்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஏலம் எடுக்க வந்த பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் அலுவலக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏ குணசேகரன் கூறுகையில், ஏலத்தை முறையாக நடத்தாத அலுவலர்கள் குறித்து முதலமைச்சரிடம் முறையிட போவதாகவும், நடவடிக்கை எடுக்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: பார் உரிமையாளரைக் கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!