ETV Bharat / city

கரோனா காலத்திலும் எங்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jul 8, 2020, 1:33 PM IST

கரோனா ஊரடங்கு காலத்திலும் எரிவாயு குழாய் பதிக்க கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு வரக்கோரி, விவசாயிகளுக்கு கடிதம் அனுப்பி அலைக்கழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் கண்டியன்கோவில் பகுதி விவசாயிகள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

tiruppur farmers black flag protest
tiruppur farmers black flag protest

திருப்பூர்: பெட்ரோல் பைப்லைன் திட்டத்திற்காக விசாரணை என்ற பெயரில் விவசாயிகளை அலைக்கழிப்பதை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை முதல் தேவனக்கொந்தி வரை திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி என 7 மாவட்டங்கள் வழியாக விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு, மாற்றாக சாலை ஓரம் கொண்டுச் செல்ல வேண்டும் எனக் கோரி விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் கண்டியன் கோவில் பகுதியில், பாரத் பெட்ரோலியம் BPCL அமைக்கும் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை, கரோனா தொற்றை கருத்தில்கொள்ளாமல் விசாரணைக்கு அழைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோதனைச் சாவடியில் கையூட்டு வாங்கும் அலுவலர்கள்; சிசிடிவி பதிவில் கையும் களவுமாக சிக்கினர்!

மேலும், உயர்மின் கோபுரம், கெயில் குழாப் பதிப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்த முனையும் மத்திய, மாநில அரசுகளின் செயலைக் கண்டித்தும் விவசாயி ஒருவரது தோட்டத்தில் கருப்புக் கொடி ஏந்தி, விவசாயத்தை நாசமாக்கும் திட்டங்களை கைவிடக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.