ETV Bharat / city

சிறுமியை மயங்கிய நிலையில் சாலையில் விட்டுச்சென்ற பெண்: காவல் துறை விசாரணை - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: 8 வயது சிறுமியை மயங்கிய நிலையில் சாலையில் விட்டுச்சென்ற பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சிறுமியை மயங்கிய நிலையில் ரோட்டில் விட்டுசென்ற பெண்

author img

By

Published : Dec 26, 2020, 11:50 AM IST

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தண்டுக்காரன் பாளையத்தில் 8 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை மயங்கிய நிலையில் மூச்சுத் திணறலுடன் முகத்தில் சில காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது.

அந்தச் சிறுமியைக் கண்ட அப்பகுதி மக்கள், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி அருகே அமர்ந்திருந்த பெண் சிறிது நேரத்தில் சிறுமியை விட்டுவிட்டு தனியாக நடந்துசெல்வது தெரிந்தது. இதையடுத்து சிறுமியை விட்டுச் சென்றது அந்தப் பெண்தான் என முடிவுசெய்த காவல் துறையினர் அந்தப் பெண்ணைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் பெண் ஒருவர் தனியாக நின்றிருப்பதாக அவ்வழியே சென்ற ஒருவர் ஊர் பொதுமக்களிடம் தகவல் தெரிவிக்க பொதுமக்கள் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணை சென்று பார்த்தபோது, சிசிடிவி காட்சியில் குழந்தையை விட்டுச் சென்றது இந்தப் பெண்தான் எனத் தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததின்பேரில் அங்கு வந்த காவல் துறையினர் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் பெயர் சைலஜா என்றும், அவரது கணவரின் பெயர் முத்துசாமி என்பதும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்துவருவதாகவும், தான் ஒரு மருத்துவர் என்றும் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.

அதேபோல் எலி மருந்து உட்கொண்டதாகவும் அவர் தெரிவித்ததையடுத்து அவரை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதனிடையே விட்டுச் செல்லப்பட்ட 8 வயது சிறுமி இவரின் மகளா, பெங்களூருவிலிருந்து திருப்பூருக்குச் சிறுமியை அழைத்துவந்து விட்டுச் செல்வதற்கான காரணம் என்ன உள்ளிட்ட விவரங்கள் குறித்து காவல் துறையினர் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை மயக்க நிலையில் விட்டுச் சென்ற பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.