ETV Bharat / city

'தமிழ்நாடு பாஜக தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்' - வானதி சீனிவாசன் - In consultation with industry professionals

திருப்பூர்: தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், காலியாக உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

vanathi srinivasan
author img

By

Published : Sep 4, 2019, 11:22 AM IST

திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவின் கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றன.

Bjp meeting  vanathi srinivasan  வானதி சீனிவாசன்  திருப்பூர்  தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம்  In consultation with industry professionals  Tamil Nadu BJP General Secretary Vanathi Srinivasan
ஆலோசனை கூட்டம்

காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது ஏன்? அதனால் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன.

காஷ்மீர் விவகாரத்தில் திமுக ஆரம்பத்தில் எதிர்ப்பு நிலைப்பாடோடு இருந்த நிலையில் பொதுமக்களிடம் திமுகவிற்கு ஆதரவு இல்லாத காரணத்தால் தற்போது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவருகிறது.

தொழில் துறையினருடன் ஆலோசனை

மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்பதை விரைவில் கட்சியின் தலைமை முடிவு செய்யும், தலைவர் இல்லாத காரணத்தால் பாஜகவின் செயல்பாடுகளில் எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் பணிகள் தொய்வின்றி நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

Intro:பாஜகவின் தமிழக தலைவர் யார் என்பதை பாஜகவின் தலைமை முடிவு செய்ய திருப்பூரில் பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி

Body:திருப்பூரில் பாஜகவின் கோட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பொய்யான குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றன. காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஏன் அதனால் காஷ்மீருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மாவட்டம் தோறும் பாஜக சார்பில் கூட்டங்கள் நடத்த இருப்பதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் திமுக ஆரம்பத்தில் எதிர்ப்பு நிலைப்பாடு இருந்த நிலையில் பொதுமக்களிடம் திமுகவிற்கு ஆதரவு இல்லாத காரணத்தால் தற்போது ஆதரவு நிலைபாட்டை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.அதேபோல் தமிழக பாஜக தலைவர் யார் என்பதை விரைவில் பாஜகவின் தலைமை முடிவு செய்யும் எனவும் பாஜக தலைவர் இல்லாத காரணத்தால் பாஜகவின் செயல்பாடுகளில் எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.