திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 1,029 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்றது.
அப்போது, திருப்பூர் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய, பழைய பேருந்து விரிவாக்கப் பணிகள், மாநாட்டு அரங்கம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தினசரி சந்தையின் விரிவாக்கப் பணிகள் உள்ளிட்டவற்றை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.