பொங்கலூர், கொடுவாய், குண்டடம், பல்லடம், பூளவாடி உள்ளிட்ட பல பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விளைச்சல் இந்த ஆண்டு அதிகமாக இருந்தபோதிலும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பட்டறையிட்டு சேமித்து வைத்திருந்தனர். இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், சேமிப்பு பட்டறைகளில் உள்ள சின்ன வெங்காயத்தினை வியாபாரிகள் 60 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை கொள்முதல் செய்து வருகின்றனர். சேமிப்பில் இருந்த சின்ன வெங்காயம் கட்டுப்படியாகும் விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாள்களாக சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விழாக்காலம் நெருங்கி வருவதால் மேலும் வெங்காயத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விலையில்லா நாட்டுக் கோழிக்குஞ்சுகளை வழங்கிய அமைச்சர்!