ETV Bharat / city

அரசு மதுபான கடையை அகற்றக்கோரி தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்! - Triuppur District News

திருப்பூர்: அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தடையை மீறி கழுத்தில் மாலை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்
போராட்டம்
author img

By

Published : Dec 28, 2020, 2:13 PM IST

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்
அரசு மதுபான கடையை அகற்றக்கோரி தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்

ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று (டிச. 28) மதுபான கடைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போடப்பட்டிருந்த பந்தல், நாற்காலி ஆகியவை அகற்றப்பட்டதால் போராட்டக் குழுவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பந்தல் அகற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் தடையை மீறி கழுத்தில் பாட்டில் மாலை அணிந்து கறுப்புக் கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்
போராட்டக் குழுவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம்

இதையும் படிங்க: சிறுமிகளைக் கடத்திய அதிமுக பிரமுகரின் மகன் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.