திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இந்த கன மழை காரணமாக சாலைகளிம் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், இந்த கனமழை காரணமாக கணக்கம்பாளையம் பகுதியில் மழை நீர் சாக்கடைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, அப்பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் புகுந்த தாய் எலி, தனது குட்டிகளை காப்பாற்ற போராடியது.
தண்ணீரால் மூழ்கிய வளைக்குள் இருந்து, குட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்துவந்து அருகில் போட்டது. இதேபோல ஐந்து எலி குட்டிகளையும், மழை நீரில் இருந்து காப்பாற்றியது தாய் எலி.
இதனை அங்கு மழைக்காக ஒதுங்கி நின்ற ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: 'உங்க நகரத்து நாகரிகமே வேண்டாம்' - சென்னையிலிருந்து 650 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்த பாண்டியன் தாத்தா!