ETV Bharat / city

’7.5% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் 300 பேர் மருத்துவர்களாவர்’ - 7.5% உள் ஒதுக்கீடு

திருப்பூர்: தமிழகத்தில் 7.5% உள் இட ஒதுக்கீட்டால் 300க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

sengottaiyan
sengottaiyan
author img

By

Published : Oct 29, 2020, 8:06 PM IST

பெருமாநல்லூரில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள, 571 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கும் நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ” இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் விதமாக, 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக 300க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில முடியும். பள்ளிகள் திறப்பது குறித்து வருவாய்த்துறை மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, முதலமைச்சர் அறிவிப்பார் “ என்று தெரிவித்தார்.

’7.5% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் 300 பேர் மருத்துவர்களாவர்’

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித் துறைக்கு கடைசி வாய்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.