ETV Bharat / city

மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவி வேண்டும் - கண்ணீருடன் பெற்றோர்கள் மனு

திருப்பூர்: மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவி செய்யக்கோரி அவரது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவி கேட்டு பெற்றோர்கள் மனு

author img

By

Published : Jul 14, 2020, 1:40 AM IST

திருப்பூர் கே.வி.ஆர். நகரைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகரன், ஜோதி தம்பதி. இவர்களது மகன் அசோக் பாபு (35). இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சந்திரசேகரன் தனது மனைவி ஜோதியுடன் மகன் அசோக் பாபுவிற்கு உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார்.

இதுகுறித்து சந்திரசேகரின் மனைவி ஜோதி கூறுகையில், "எங்களது மகன் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி. நாங்கள் ஆசையாக அவனை வளர்த்து வருகிறோம். எங்களுக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்துவிட்டோம். எனது மகன் சுயமாக எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் யாரும் வாடகைக்கு வீடுகூட வழங்க மறுக்கின்றனர்.

மேலும் எங்களுக்கும் வயதாகிவிட்டதால் வேலைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் எங்களின் மகனின் எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் நாங்கள் குடியிருக்க ஒரு வீடு வழங்க வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா பீதி: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.