திருப்பூர்: ஏபிடி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திகை சாமி. இவர் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் விற்பனைக்காக வைக்கப்படும் நாட்டுக் கோழிகள் அடிக்கடி திருட்டு போய் வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய காவல் நிலையத்தில் அவர் முன்னதாக புகார் அளித்திருந்தார். அதேசமயம் கடையில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி கோழி திருடர்களைத் தேடியும் வந்தார்.
இந்நிலையில், நேற்று (செப்.02) மதியம் கடைக்கு வந்த மூவர், நாட்டுக் கோழியை திருடிச் செல்லும் காட்சிகள் அவரது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது.
கோழி திருடர்கள் கைது
பின்னர், கோழி திருடர்களை அடையாளம் அறிந்துகொண்ட கார்த்திகைசாமியும் அவரது நண்பர்களும் திருடர்களை மடக்கிப் பிடித்து, அவர்களது இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, அவர்கள் மூவரையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிடித்த மது பானங்களைக் குறிவைத்து திருடிச் செல்லும் வினோத திருடர்கள்!