தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் (37) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார். இதனிடையே இவரது வீட்டின் அருகே குடியிருந்துவரும் 12ஆவது படிக்கும் 17 வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார்.
கரோனா காலத்தில் பள்ளிகள் விடுமுறையில் இருந்த காரணத்தால் இவர் வேலைபார்க்கும் பனியன் நிறுவனத்தில் அந்தச் சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அந்தச் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்தச் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் போக்சோவின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'இடஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸுக்கு ஆதரவாக நிற்பேன்' - சீமான்