தூத்துக்குடி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த தினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி பிறந்த இல்லத்தில் அவரது சிலைக்கு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 30 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும் 11 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியமும் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 31ஆயிரம் 880 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதனைத்தொடர்ந்து வ.உ.சியின் பேத்தி செல்விக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அன்பும் அறிவும் அள்ளிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான நாள்