தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முத்தையாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் தூத்துக்குடி சிதம்பரநகர் மையவாடியில் மாநகராட்சிச் சுகாதாரக் குழுவினரால் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளோடு அடக்கம் செய்யப்பட்டது.
அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜலால் என்ற முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று ஒரே நாளில் கரோனா தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்து மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.