ETV Bharat / city

'3 வாரத்திக்குள் முகிலன் பற்றிய உண்மையை அரசு வெளியிட வேண்டும்' - கிருஷ்ணமூர்த்தி - mugilan bring back association

தூத்துக்குடி: 'முகிலன் குறித்த உண்மையை இன்னும் மூன்று வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு, மக்கள் முன்பு நிரூபிக்க வேண்டும்', என்று முகிலன் மீட்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

முகிலன் மீட்பு கூட்டியக்கம்
author img

By

Published : Jun 9, 2019, 7:21 PM IST

முகிலன் மீட்பு கூட்டியக்கம் ஆலோசனைக் கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "சுற்றுச்சூழல் போராளியான முகிலன் காணாமல் போய் நூறு நாட்களுக்கும் மேல் ஆகிறது. ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சில காவல்துறை அலுவலர்களே காரணம் என்று முகிலன் வெளியிட்ட ஆதாரபூர்வமான வீடியோவை தொடர்ந்து, அவர் காணாமல் போயுள்ளார்.

முகிலன் குறித்த உண்மையை இன்னும் மூன்று வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு, மக்கள் முன்பு நிரூபிக்க வேண்டும். முகிலன் வெளியிட்ட வீடியோவில் உள்ள காவல் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை சட்டபூர்வமாக எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையைும் நிரந்தரமாக மூடுவதற்கு கொள்கை ரீதியாக சட்டமியற்ற வேண்டும். இவை அனைத்தையும் நாங்கள் வலியுறுத்தி வரும் 17 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

'3 வாரத்திக்குள் முகிலன் பற்றிய உண்மை அரசு வெளியிடவேண்டும்'-முகிலன் மீட்பு கூட்டியக்கம்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற உறுப்பினர்களும் ஸ்டெர்லைட் ஆலை அகற்றுவது குறித்து அவரவர் தொகுதிகளில் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்" என தெரிவித்தார்.

தூத்துக்குடி

முகிலன் மீட்பு கூட்டியக்க குழு ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டியக்க இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். இதை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது கூறுகையில் சுற்றுச்சூழல் போராளியான முகிலன் காணாமல் ஆக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேல் ஆகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த அரச என்ற பயங்கரவாதத்தில் காவல்துறையை ஏவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை சுட்டிக்காட்டும் வகையில் முகிலன் வெளியிட்ட ஆதாரபூர்வமான வீடியோவை தொடர்ந்து அவர் காணாமல்போயுள்ளார். இதுகுறித்து தமிழக அரசும், சிபிசிஐடி போலீசார் தவறான தகவல்களை நீதிமன்றத்தின் வாயிலாகவும், ஊடகத்தின் வாயிலாகவும் பரப்பி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

முகிலன் குறித்த உண்மையை முகிலனை 3 வாரத்திற்குள்ளாக தமிழக அரசு மக்கள் முன்பு நிரூபிக்க வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து முகிலன் வெளியிட்ட ஆதாரபூர்வமான வீடியோவை கொண்டு பயங்கரவாதத்திற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக எடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இந்த மண்ணில் இருந்து அகற்றுவதற்கு சட்டமியற்ற வேண்டும்.
இந்த நிலையில் வருகின்ற 17 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.
அதே சமயத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டெர்லைட் ஆலை அகற்றுவது குறித்து அந்தந்த அவைகளிலே உரை நிகழ்த்த வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அர்ஜுனன் பேசுகையில்,
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உண்மையை அம்பலப்படுத்திய சமூக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 114 நாட்களுக்கும் மேல் ஆகிறது.  இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆகவே சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி முகிலன் மீட்பு கூட்டியக்கம் என்று ஒரு குழு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மூன்று வாரத்திற்குள்ளாக முகிலன் வழக்கில் உண்மையை கண்டறிந்து அவரை மக்கள் முன்பு நிறுத்த வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடுக்கு காரணமாக இருந்த வருவாய் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து உடனடியாக ஊர்மாற்றம் செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக வருகின்ற 17 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.
இது தவிர, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.