தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நேற்று (மே 05) காலை வரையில் முதல் யூனிட் மட்டுமே இயங்கியது.
மதியத்துக்குப் பிறகு படிப்படியாக மற்ற யூனிட்டுகள் செயல்பட தொடங்கியது. தற்போது 3ஆவது யூனிட் தவிர்த்து மற்ற 4 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நடைபெறுகிறது. நேற்று இரவு 7 மணி அளவில் 696 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இதுகுறித்து அனல்மின் நிலைய தலைமை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் கூறும்போது, 'தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் போதுமான நிலக்கரி உள்ளது. மேலும், தேவையான நிலக்கரி வந்து கொண்டு இருக்கிறது.
தற்போது ஒரு கப்பலில் 55ஆயிரம் டன் நிலக்கரி வந்து துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிலக்கரியும் அனல் மின்நிலையத்துக்கு வரும்போது, 10 நாட்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லாமல் மின் உற்பத்தி இயந்திரங்களை இயக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்று மாறும் வாய்க்காலின் நிலை...எங்கே செல்கிறது நிதி!