ETV Bharat / city

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் 440ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றம்:ஏராளமானோர் பங்கேற்பு! - பொதுமக்கள் உற்சாக பங்கேற்பு

தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயத்தின் 440ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி பனிமய மாதா 440 ஆவது திருவிழா - பொதுமக்கள் உற்சாக பங்கேற்பு

author img

By

Published : Jul 26, 2022, 3:02 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும் நற்கருணை பவனி நடைபெறும்.

இங்கு கிறிஸ்துவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், இஸ்லாமிய மக்களும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி அன்னையை வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திருவிழாவில், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாதாவைத் தரிசிக்க தூத்துக்குடிக்கு பக்தர்கள் வருவார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற்று வழிகாட்டுதலின்படி மாஸ்க் அணிந்து பக்தர்கள் புடை சூழ பனிமய மாதா ஆலய கொடியேற்றம் தொடங்கியது.

உற்சாக கோஷம் : காலை, கூட்டுத்திருப்பலிக்குப் பிறகு ஆலயத்தின் முன் உள்ள கொடிக்கம்பத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி தலைமையில், பங்கு தந்தை குமார் ராஜா மற்றும் முக்கியப் பங்கு நிர்வாகிகள் முன்னிலையில், பனிமய மாதா ஆலயத்திருவிழாவின் கொடி ஏற்றப்பட்டது. அப்போது பனிமய மாதாவை வேண்டி மரியே வாழ்க, மரியே வாழ்க என குரல் எழுப்பியும், சமாதான புறாக்களை பறக்கவிட்டும் விழா தொடங்கப்பட்டது.

இத்திருவிழாவை முன்னிட்டு சுமார் 1000 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் ரோஸ்லின் கூறுகையில், 'தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 440ஆவது ஆண்டு திருவிழாவின் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா காரணமாக மக்கள் வரவில்லை. ஆனால், இன்று பேரலாயத்தில், பக்தியோடு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.

மேலும், திருமணம், நாட்டுப்படகு மீனவர்கள், தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தும் வண்ணம் பழம், பால், லட்டு கொடுத்து வருகின்றனர். ஆண்டுதோறும் மக்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே உள்ளதாகவும் மாதாவின் ஆசி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்’ எனவும் கூறினார்.

பொதுமக்கள் அண்டன் கோமஸ் கூறுகையில், 'இந்த ஆண்டு பனிமய மாதா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 2 வருட கரோனா காலம் முடிந்து இந்த வருடம் குடும்பம் குடும்பமாக வந்துள்ளனர். மக்கள் அனைவரும் சாதி, சமயப்பாகுபடுன்றி வந்துள்ளனர். ஆகவே, பனிமய மாதா நல்ல தொழில், மகிழ்ச்சியை அளிக்கிறார்’ எனக்கூறினார்.

ஆயர் ஸ்டீபன் ஆண்டனி கூறுகையில், 'இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள், கொடியேறும் போது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மரியே வாழ்க, மரியே வாழ்க என கோஷமிட்டனர். தூத்துக்குடி நகரமே இங்கு தான் உள்ளது.

நேற்றைய தினம் நல்ல மழை பெய்தது. மாதாவின் ஆசி அனைவருக்கும் இருக்கிறது. கோயில் நிர்வாகிகள் நல்ல முறையில் திட்டம் தீட்டி அதிகப்பொறுப்புடன் மக்கள் அனைவரும் கொடியேற்றத்தை கண்டு களிக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக அனைவருக்கும் பாராட்டுகள். நோய், வறுமை நீங்கி அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக இருக்க பனிமய அன்னை துணை இருப்பார்’ எனக்கூறினார்.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் 440ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றம்:ஏராளமானோர் பங்கேற்பு!

இந்நிகழ்வில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா - கன்னியா பூஜை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.