ETV Bharat / city

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை - assembly

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றி, துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்

author img

By

Published : Oct 18, 2022, 9:05 PM IST

தூத்துக்குடி: துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆணையம் சார்பாகத் தமிழக அரசுக்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதில்,“தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலின் தாயார் வனிதா கூறுகையில்,”நியாயம் கிடைக்கும் எனப் போன இடத்தில் எங்களது உயிரைக் கொடுத்தது தான் மிச்சம். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர் அவர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் அதில் முழு சந்தோசம் இல்லை. இந்த துப்பாக்கிசூட்டுக்கு காரணமான அலுவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

விசாரணையை விரைவாகத் தொடங்கி குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடினோம் ஆதலால் நிரந்தரமாக அகற்ற வேண்டும்” என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்

இதையும் படிங்க: சசிகலாவை குற்றம் சாட்டும் ஆணையம் - ஓ.பி.எஸ். இணைப்பு சாத்தியமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.