ETV Bharat / city

மீனவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை : கனிமொழி எம்பி - Kanimozhi MP, Minister Geetha Jeevan

தூத்துக்குடி : மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் தீர்ப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 15, 2021, 6:23 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. புனித மரியன்னை ஆண்கள் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:-

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அதை கண்டுகொள்ளாத அதிமுக அரசு ரூ.1000 மட்டும் கரோனா நிவாரணமாக வழங்கியது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆட்சியில் மறுக்கப்பட்ட நிவாரண தொகையை வழங்க உத்தரவிட்டார்.

மீனவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் தீர்ப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த மாதம் முதற்கட்டமாக ரூ.2000 கரோனா நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக ரூ.2000 நியாய விலை கடைகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

மேலும் மக்கள் நலனுக்காக 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கும் பணியும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மீனவர்களின் நலனுக்காக அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே மீனவர்களின் கோரிக்கைகளை அவர்களின் பக்கம் நின்று ஆராய்ந்து அதற்கான தீர்வை எட்டும் வழிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார் என்றார்.

இதைத்தொடர்ந்து அவர் பூபால்ராயர்புரம் பகுதி நியாயவிலை கடையில் தமிழ்நாடு அரசின் இரண்டாம் கட்ட கரோனா நிவாரணத்தொகை ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சிறப்பு நலத்தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி நலப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக சாருஸ்ரீ நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.