தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் கடந்த 17ஆம் தேதி காரில் கடத்தி கொலைசெய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் திருமணவேல் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட ஆறு பேர் மீது கொலை உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, செல்வனின் உறவினர்கள் குற்றவாளிகளைக் கைதுசெய்யுமாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் எதிரொலியாக முதலில் மூன்று நபர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். தொடர்ந்து கொலையை அரங்கேற்றிய திருமணவேல் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உடலை வாங்கி உறவினர்கள் நல்லடக்கம் செய்தனர்.