ETV Bharat / city

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு: 2ஆம் நாளாக சிபிசிஐடி விசாரணை! - CBCID Enquiry

தூத்துக்குடி: தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் சிபிசிஐடி காவலர்கள் இரண்டாம் நாளாக விசாரணை நடத்தினர்.

tattarmadam_murder_case_2nd_day_enquiry of CBCID

author img

By

Published : Sep 26, 2020, 6:45 AM IST

தூத்துக்குடி மாவட்டம் செல்வன் கொலை வழக்கு திசையன்விளை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் ஹரி, கிருஷ்ணன் மற்றும் முன்னாள் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் ஆள் கடத்தல், கொலை வழக்கு உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் துறை டிஜிபி திரிபாதி கடந்த 21ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் இதுவரை சின்னதுரை மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருமணவேல் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இரண்டு பேர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இதில் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் வழக்கின் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அனில் குமாரிடம் செப்டம்பர் 23ம் தேதி ஒப்படைத்தார்.

பின்னர் உடனடியாக விசாரணையை தொடங்கிய டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி காவலர்கள் 7 வாகனங்களில் செல்வன் கடத்தப்பட்ட கொலுந்தட்டு பகுதியில் விசாரணை செய்தனர்.

இந்நிலையில், இன்று 2ஆம் நாள் விசாரணையாக காவல் ஆய்வாளர் தேவி தலைமையிலான சிபிசிஐடி காவலர்கள் கொழுந்தட்டு மற்றும் தட்டார்மடம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதைப்போல் காவல் ஆய்வாளர் சபிதா தலைமையிலான சிபிசிஐடி காவலர்கள் தட்டார்மடம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: ஹைதராபாத்தில் அரங்கேறிய ஆணவப் படுகொலை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.