புரெவி புயல் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில் புரெவி புயல் வலுவிழந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக லேசான சாரல் மழை பெய்துவந்தது. இதற்கிடையில் நேற்று (டிச. 06) காலை முதலே தூத்துக்குடியில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இடைவிடாது பெய்த கனமழையினால் தூத்துக்குடியின் முக்கியச் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் மழைநீரில் மிதந்தபடி செல்கின்றன.
நகரின் தாழ்வான பகுதிகளில் ஏற்கனவே நீர் தேங்கி கிடந்த நிலையில் இந்தக் கனமழையினால் மேலும் நீர் தேங்கியது. இதனால் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்; பெங்களூரு வந்தடைந்தார் ரஜினிகாந்த்!