தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே இராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (45). இவர் நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி நிர்மலா தேவி, ஆறுமுகநேரி பேரூராட்சியின் 14 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் இன்று (ஜூலை 12) திருச்செந்தூர்-திருநெல்வேலி சாலையில் அம்மன்புரம் அருகே சாலையோர டீக்கடை ஒன்றில் காலை சுமார் 8.30 மணி அளவில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத சிலர் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன் ஆகியோர் நேரில் விசாரணை சென்று நடத்தினர். அவரது உடல் உடற்கூராய்வுக்காக, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இருப்பிட சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கும் அரசு இ சேவை மையம்!!