ETV Bharat / city

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர் மாயம் - பரிதவித்து நிற்கும் குடும்பம்

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானம் ஏறிய கணவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை என்பதால் அவரது மனைவி சோகத்தில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Oct 25, 2021, 7:53 PM IST

பரிதவித்து நிற்கும் குடும்பம்
பரிதவித்து நிற்கும் குடும்பம்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கம்பத்துபட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டிச்சாமி என்பவரின் மகன் வீரசின்னு(36), இவரது மனைவி பாக்கியம் (32) இந்த தம்பதிக்கு வினித்(10), வினிதா(9) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

தொடக்கத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்த வீரசின்னு, கொத்தனார் வேலை பார்த்து வந்த நிலையில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார்.

பணிக்கு சென்று 2 ஆண்டுகள் ஒப்பந்த பணி முடிவடைந்த நிலையில், ஊருக்கு வந்தவர் விடுமுறை முடிந்து மீண்டும் 2 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துபாய்க்கு சென்றுள்ளார்.

23 மாதங்கள் பணியாற்றிய நிலையில், மீதம் ஒரு மாதம் இருக்கும் நிலையில் கடந்த வாரம் மனைவியிடம் பேசுகையில் 20ஆம் தேதி ஊருக்கு திரும்ப உள்ளதாகவும், அதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் இறங்கி பின்னர் ஊருக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையெடுத்து வீரசின்னு உறவினர்கள் அவரை அழைத்து வர சென்றுள்ளனர். 20ஆம் தேதி 7.30 மணிக்கு தனது மனைவியிடம் பேசிய வீரசின்னு சார்ஜா விமான நிலையத்தில் இருப்பதாகவும், கரோனா பரிசோதனை செய்து, நெகடிவ் என்று முடிவு வந்துவிட்டதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் விமானம் கிளம்பிவிடும் என்றும், 11.20 மணிக்கு விமானம் சென்னை வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவருடன் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் விமானம் கிளம்பியதும், வீரசின்னு மனைவி பாக்கியத்தினை தொடர்பு கொண்டு, வீரசின்னு விமானத்தில் ஏறி கிளம்பி விட்டதாக கூறியுள்ளனர்.

பரிதவித்து நிற்கும் குடும்பம்
பரிதவித்து நிற்கும் குடும்பம்

சென்னை விமானநிலையத்திற்கு வீரசின்னு கூறிய விமானம் வந்த பின்னர் அவர் வரவில்லை என்பதால் அவரை அழைத்து வர சென்ற உறவினர்கள் வெகுநேரம் காத்திருந்தும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். அவருடைய உறவினர்கள் மற்றும் மனைவி, வீரசின்னு செல்போனிற்கு தொடர்பு கொண்ட போதும் அவருடைய போன் சுவிட்ச் ஆப் இருப்பதை கண்டு அதிர்ச்சிடையந்தனர்.

இந்நிலையில் வீரசின்னுவை விமானத்தில் ஏற்றிய அவருடன் பணியாற்றும் ஊழியரிடம் கேட்ட போது, அவர் தற்பொழுது சென்னை வந்து இருக்க வேண்டும், தானும் தொடர்பு கொண்ட போது அவருடை போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வீரசின்னு மனைவி பாக்கியம் மற்றும் அவரது உறவினர்கள் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானம் ஏறியவர் வீடு திரும்பவில்லை என்பதால்அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதையும் படிங்க:'தமிழ் மக்கள் இல்லையென்றால் நான் இல்லை'- டெல்லியில் ஒலித்த தலைவரின் குரல்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.