தூத்துக்குடி: கடந்த மூன்று நாள்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் அடித்துவந்த நிலையில், இன்று பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி குடியிருப்புகளை ஏற்கனவே சூழ்ந்துள்ள நிலையில் அதன் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து இன்று (டிசம்பர் 4) காலை 8.40 மணிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் தாமதமான அறிவிப்பால் ஏற்கனவே பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மீண்டும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். அவர்களை அழைக்கவந்த பெற்றோர்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: Cyclone jawad:உருவானது புதிய புயல், நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பு